திருமண நிகழ்வுகளுக்கு மீண்டும் கட்டுப்பாடு – சற்றுமுன் அறிவிப்பு!

நாட்டில் புதிதாக சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய சுகாதார வழிகாட்டல் ஆனது இன்று தொடக்கம் எதிர்வரும் டிசம்பர் 15ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

அதன் பிரகாரம் திருமண நிகழ்வுகளில் பங்கு பற்றுவோரின் அதிகபட்ச எண்ணிக்கை 200 பேராக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு திறந்தவெளி கொண்டாட்டங்களில் 250 பேர் வரை கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மரணசடங்குகளில் 20பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும்.

திரையரங்குகளில் ஒரு தடவையில் 75 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version