இலங்கை

கலவையில் மாற்றம் செய்தோம் – லிட்ரோ நிறுவனம் பரபரப்பு தகவல்

எரிவாயு சிலிண்டர் கலவையில் சில மாற்றங்களை செய்ததாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் அதன் பல மாதிரிகளை சந்தையில் அறிமுகம் படுத்தியதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் முகாமையாளர் ஐ.விஜயரத்ன தெரிவித்தார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னர் காணப்பட்ட நிலையான அமைப்பில் குறிப்பிடத்தக்க சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது.

அதன் பரிட்சார்த்த நடவடிக்கைகள் வெற்றி அளிக்காமையால் அந்த சிலிண்டர்கள் சந்தையிலிருந்து அகற்றப்பட்டது.

எனினும் இப்பொழுது சந்தையில் உள்ள சிலின்டர்கள் நிலையான தரநிலைக்கு ஏற்பவே உள்ளது.

இலங்கையில் தினமும் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button