வெடிக்கும் சிலிண்டர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இலங்கையில்  தற்போது வரை 20க்கும் அதிகமான காஸ் சிலிண்டர்கள் வெடித்துள்ளது.

இவ்வாறு வெடிப்பதற்கு காரணம் சமையல் எரிவாயு கொள்கலன்களில் செறிமானங்கள் மாற்றப்பட்டுள்ளாது என்பது கனியவள கூட்டுத்தாபனத்தின் இரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

பரிசோதனை நடாத்தப்பட்ட எரிவாயு கொள்கலன்களில் பியூட்டேன் மற்றும் ப்ரோப்பேன் ஆகியன 51:49 எனும் விகிதத்தில் அடங்கியுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது மிகவும் பாரதூரமான பிரச்சினையாகும். எனவே இது தொடர்பான அறிக்கை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கோரிக்கை விடுத்தார்.

இதனை நிராகரித்த வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, நுகர்வோர் அதிகார சபையின் கோரிக்கைக்கு அமைய குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டார். அத்துடன் அதனை வெளியிடுவதற்கான அதிகாரம் தமக்கில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version