இலங்கையில் கடந்த சில நாட்களாக எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் ஆங்காங்கே இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் நிக்கவெரட்டிய, கந்தேகெதரவில் உள்ள வீடொன்றில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சந்தேகத்திற்கிடமான எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக குறித்த வீடு பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
சம்பவத்தின் போது வீட்டின் தாயும் தந்தையும்,பிள்ளைகளும் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தமை காரணமாக எவரும் பாதிக்கப்படவில்லை.
இந்தநிலையில் சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நிக்கவெரட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த ஒரு மாதத்தில் நாட்டில் இடம்பெற்ற ஐந்தாவது சிலிண்டர் வெடிப்பு சம்பவம் இது என்பது குறிப்பிட்டுள்ளது.