தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 67வது பிறந்த தினம் இன்றாகும்.
இந்நிலையில் தமிழக வாழ்வுரிமைகள் கட்சியின் தலைவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகனால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
“உலகத் தமிழினத்தின் ஒற்றை முகவரி தமிழீழத் தேசியத் தலைவர் மாவீரன் வே.பிரபாகரன். அவர்களின் 67வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தோழர்களுடன் பங்கேற்றேன்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.