யாழில் பிரபல பாடசாலை மாணவி தற்கொலை!

யாழில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் , உயர்தரத்தில் கல்வி கற்கும்  மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த சம்பவம் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவமானது இன்று அதிகாலை 1 மணியளவில் அரியாலை பகுதியில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்றுவந்த மாணவியான பிரேமச்சந்திரன் திசாரா (17) என்பவரே இவ்வாறு உயிரினை மாய்த்துள்ளார்.

குறித்த மாணவி இன்றைய தினம் செயன்முறை பரீட்சை தொடர்பாக பாடசாலைக்கு வருமாறு ஆசிரியரால் அழைக்கப்பட்டிருந்தார்.

அதற்கான தயார்ப்படுத்தல்களை செய்துவிட்டு குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக டி.வி(தொலைக்காட்சி) பார்த்து விட்டே இவ்தவறான முடிவினை எடுத்துள்ளதாக உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Exit mobile version