படகு விபத்தின் எதிரோலி! முஸ்லீம் எம்.பியின் வீடு உடைத்து சேதம்!

படகு விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தால் ஆவேசம் ஆத்திரமடைந்த கிண்ணியா மக்கள் , கிண்ணியா பிரதேச செயலகத்தின் மீது தாக்குதல் நடத்திய பின்னர் எம்.எஸ்.தௌபீக்கின் இல்லத்தின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கிண்ணியாவில் எப்போதும் ஆவேசம் ஆத்திரமடைவது சாதாரண விடயம்.

ஏற்கனவே முன்னாள் அப்துல்லாஹ் மகரூப் பின் இல்லத்தின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இப்படியாக பொதுச் சொத்துகள், உடைமைகள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் கம்பி எண்ணிய வரலாறும் உள்ளது!

MP யின் வீட்டையோ DS செயலகத்தையோ தாக்கி. உடைத்து என்ன பலன் ?இது மொக்குத் தனமான ,வேக்கைத்தனமான விடயம்! தாக்குதல் நடத்திய வாலிபர் கூட்டம் விரைவில் கம்பி எண்ணும்!

உண்மையில் படகு விபத்தில் உயிரிழந்த குடும்பத்தைச் சேர்ந்த யாருமே இந்த மொக்குத் தனமான செயலில் ஈடுபட்டிருக்க மாட்டான்!

ஆனால் இந்த அருவருக்கத் தக்க செயலில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான வாலிபர்கள் ஒரு ஆவேசத்தில் ஆத்திரத்தில் தண்ட சோறு பார்ட்டிதான் செய்திருக்கும்!

இந்தக் கூட்டம் அனேகமாக 25 வயது தாண்டி இருக்காது அத்தனை பேரும் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள், இனி பொலிஸ் கோட்டு  என்று அலைய வேண்டியதுதான்!

எப்படியோ நாளை முதல் தாக்குதல் கூட்டத்தை தேடி பிடித்து சிறையில் அடைபட்டு விடுவாங்கள்! ஏனெனில் நம்மாளுங்க காட்டிக் கொடுப்பதில் வல்லவர்கள்!

Exit mobile version