சபாபதி திரை விமர்சனம்!
பிறப்பில் இருந்து பேச்சு சரியாக வராமையினால், திக்கி திக்கி பேசுகிறார் நடிகர் சந்தானம்.
இவரின் அப்பா M.Sஸ்.பாஸ்கர், அரசு வேலையில் பணிபுரிகிறார். தான் ஓய்வு பெற வேண்டிய நிலைமை வருவதால் தனது மகனை வேலைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இருக்கிறார் M.S.பாஸ்கர்.
பல வேலைகளிற்கு செல்லும் சந்தானத்திற்கு அங்கே பல அவமானங்கள் ஏற்படுகிறது.
மனவிரக்தி ஏற்பட்டு சந்தானம், கோபத்தில் ஒருநாள் குடித்து விட்டு போதையில் வீட்டில் கலவரம் செய்கிறார்.
விமர்சனம்
போதையில் இருக்கும் சந்தானத்திற்கு தெரியாமலே மிகப்பெரிய விஷயம் இடம்பெறுகிறது.
இதன் மூலம் விதி விளையாடுகிறது. பின் சந்தானம் விதியின் கையில் சிக்கிக் கொள்கிறார்.
கடைசியில் விதி விளையாட்டில் சந்தானம் எப்படி எல்லாம் விளையாடுகிறார்? எப்படி இவற்றை எல்லாம் எதிர்கொள்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
வழக்கம் போல சந்தானம் தனது கலகலப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார்.
திக்கி திக்கி பேச மிகவும் சிரமப்பட்டிருப்பது தெரிகிறது. நாயகி பிரீத்தி வர்மாவுக்கு அதிகம் வேலை இல்லை.
படத்தில் சந்தானத்திற்கு பிறகு M.S.பாஸ்கரின் நடிப்பு பாராட்டக்கு உரிய வகையில் இருக்கிறது. தந்தைக்குரிய பொறுப்புடன் நடித்து இருக்கிறார். சில காட்சிகளில் மட்டும் வந்து செல்கிறார் புகழ் எனினும் இவரின் நடிப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றம்.
கதை களத்தினை சிறப்பாக சரியான முறையிலும் கொண்டு சென்று இருக்கிறார். படத்தில் நகைச்சுவை மட்டும் இல்லாமல் சில கருத்துக்களையும் சொல்லி இருக்கிறார்.
இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு இருக்குமெனில் கூடுதலாக ரசித்து இருக்கலாம். படத்தில் டைமிங் பஞ்சும், நகைச்சுவையும் படத்திற்கு நல்ல பெயரை வாங்கி தந்திருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி சிறப்பு.
பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘சபாபதி’ சபாஷ் போடலாம்.