2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் விஹாரைகள் அமைப்பதற்கு அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் வடக்கு மற்று கிழக்கு மாகாணத்தில் இன்னும் விஹாரைகள் அமைக்கப்பட போகிறதா? என இன்று பாராளுமன்றில் வைத்து செல்வம் அடைக்கலநாதன் எம்.பி கேள்வி எழுப்பினார்.
அத்தோடு இலங்கையில் சட்டமாக இருக்கும் 13வது திருத்தத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தி இந்தியாவுடனான நல்லுறவை, இலங்கை அரசு வளர்த்து கொள்ள முயற்சிக்கவேண்டும் எனவும் மாகாணசபைகளது அதிகாரங்களை வழங்கவேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.
இதன் போது குறுக்கிட்ட அமைச்சர் ஜி.எல் பீரிஸ், மாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு நல்லாட்சி அரசே காரணமென்று குற்றம் சுமத்தினார்.
எனினும் இதனை ஏற்று கொள்ளாத செல்வம் அடைக்கலநாதன், மாகாணசபை தேர்தலை பற்றி கவனம் செலுத்தபட வேண்டியது அவசியம்.
ஆனால் மாகாண சபைகளிற்கான அதிகாரங்களைப் பற்றியே தாம், கோாிக்கை விடுப்பதாக குறிப்பிட்டார்.