இலங்கை

இலங்கை நாடாளுமன்றில் மெனிகே யொஹானிக்கு பாராட்டு விழா!

மெனிகே மகே ஹிதே எனும் பாடல் ஊடக பிரபல்யமான யொஹானிக்கு நாடாளுமன்றத்தில் பாராட்டும் அகையில் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந் நிகழ்வானது எதிர்வரும் செவ்வாய் கிழமையன்று இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வினை நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளதாகவும், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி இந்நிகழ்வு இடம்பெறும் எனவும் நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகமான குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான வைத்திய கலாநிதி சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே ஆகியோரும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button