நாட்டில் கறுப்பு சந்தையில் 12.5 கிலோ எடைய்டைய வெற்று எரிவாயு சிலிண்டர் சுமார் 15 ஆயிரம் தொடக்கம் 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை 5 கிலோ எடையுடைய எரிவாயு சிலிண்டர் 8 ஆயிரம் தொடக்கம் 12 ஆயிரம் வரை விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை முழுதும் எரிவாயு விநியோகிக்கும் லிட்ரோ மற்றும் லாப் ஆகிய நிறுவனன்கள் பல மாதங்களாக தமது நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டர்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல் இருக்கின்றன.
எரிவாயு தட்டுப்பாட்டுக்கு முன்னரே வீடு உபயோக எரிவாயு சிலிண்டர் சராசரியாக ரூ.4,250 ரூபாய்க்கு விற்கப்பட்ட்ட நிலையில் இப்பொழுது குறித்த விலை அதிகரிப்பானது மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.