எதிர்வரும் 22ஆம் தேதி தொடக்கம் அனைத்து மாணவர்களுக்குமான பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளது.
இப்பொழுது அமுலில் உள்ள சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாகவும் பகுதி முறையிலும் அழைக்கப்படுவார்கள் என கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஒரு வகுப்பில் 20க்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் அவர்கள் தினமும் பாடசாலைக்கு அழைக்கப்படுவார்கள்.
ஒரு வகுப்பில் 40 வரையான மாணவர்கள் இருந்தால் ஒரு நாள் ஒரு பகுதி மாணவர்களும் மறுநாள் மற்றைய பகுதி மாணவர்களும் அழைக்கப்படுவார்கள்.
முன்னரே ஆரம்ப பிரிவு மாணவர்கள், தரம் 10, 11ம் மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான பாடசாலைகள் ஆரம்பமாகி இருந்தது.
இந்நிலையில் தரம் 6 தொடக்கம் ஒன்பது வரையான மாணவர்களுக்கு எதிர்வரும் 22ம் திகதி ஆரம்பமாக உள்ளது என்பதும் குறிப்பிட்டத்தக்கது.