இலங்கை

பொலிஸாருக்கு எதிராக மக்கள் முறைப்பாடு செய்ய முடியும்!

பொலிஸாருக்கு எதிராக மக்கள் முறைப்பாடுகளை செய்ய முடியும் என தேசிய பொலிஸ் சேவை ஆணை குழுவின் வடக்கு மாகாணப் பணிப் பாளர் சீ.ஏ.மோகன்ராஸ் தெரிவித் துள்ளார்.

இது குறித்து அ வ ர் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைத்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவையாவது

தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவின் வடமாகாண அலுவலகமானது யாழ் மாவட்ட செயலகத்தினுடைய 55ம் இலக்க அறையில் இயங்கி வருகிறது.

இங்கு பொதுமக்கள் பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும். நேரடியாக அலுவலகத்திற்கு வருவதன் ஊடகவும் முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும்.

அல்லது 0212222321 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துவதன் ஊடகவும், எழுத்து மூலமான முறைப்பாட்டினை கிராம அலுவலரது மேலொப்பத் துடன் பதிவு தபாலில் அனுப்பி வைக்கவும் முடியும்.

அத்தோடு 1960 எனும் தொலை பேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துவதன் ஊடகவும் முறைப்பாடு செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை கிராம அலுவலர் ஊடாக பொது மக்களுக்கு தெரிய படுத்துமாறும் அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button