ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி மதுரைச் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஏழு பேர் சிறையில் உள்ளனர்.
அவர்களில், மதுரை மத்திய சிறையிலுள்ள ரவிச்சந்திரன் மற்றும் அவரது தாய் தரப்பில் ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோல் வழங்கி உத்தரவிட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்தபோது கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
அதனையடுத்து மதுரை மத்திய சிறையில் உள்ள ரவிச் சந்திரனுக்கு 30 நாள் பரோலில் வெளியே செல்ல தமிழக சிறைத்துறை உத்தரவை வழங்கியுள்ளது.
குடும்பத்தினரைச் சந்திப்பது மற்றும் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட காரணங்களுக்காக ரவிச்சந்திரனுக்குப் பரோல் வழங்கவேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டிருந்தது.
இன்று 15 ஆம் திகதி சிறையிலிருந்து வெளியே வந்த அவருக்கு அடுத்த மாதம் 15 ஆம் திகதி வரைக்கும் பரோல் வழங்கப்பட்டுள்ளது.