கொழும்பு உட்பட பல பகுதிகளிலும் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர் மழை காரணமாக தேங்காய் மட்டையினை அகற்றுதல் மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஆகிய காரணங்களினால் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதன் காரணமாக தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அதனது விலையும் சடுதியாக அதிகரித்துள்ளது.
இதன்படி கொழும்பு மாவட்டத்தில் இன்றைய நிலவரப்படி தேங்காய் ஒன்றினது விலை 100 ரூபாவாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது