முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 5 பெரிய குளங்கள் வான்பாய ஆரம்பித்துள்ளன.
கடந்த வியாழக் கிழமை மழை வீழ்ச்சி பதிவாகாத நிலையிலும் குளங்களின்
நீர்மட்டமானது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முத்தையன்கட்டு நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள 8 குளங்களில் 20 அடி கொள்ளளவு கொண்ட விசுவமடு குளம் வான்பாய ஆரம்பித்துள்ளது.
புதுக்குடியிருப்பு மருதங்குளம் 14 அடி நீர் கொள்ளளவு கொண்ட குளம் தொடர்ச்சியாக வான்பாய்ந்து வருகின்றது.
வவுனிக்குள நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள 12 குளங்களில் பழைய முறுகண்டிக்குளம் 9 அடி நீர் கொள்ளளவு கொண்டகுளம் வான்பாய்கின்றது.
9 அடி நீர் கொள்ளளவு கொண்ட கோட்டைகட்டிய குளமும், 11 அடி நீர் கொள்ளவு கொண்ட தேறாங்கண்டல் குளமும் வான் பாய்கின்றன.
எனவே மக்கள் இது குறுத்து அவதானமாக இருக்குமாறு மாவட்ட நீர்ப்பாசன திணைக்களம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.