காணாமல் போனோரின் உறவினர்களிற்கு இழப்பீடு வழங்குவதற்கென 30 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.
பல்வேறுபட்ட கால பகுதியில், பல்வேறு காரணங்களுக்காக காணாமல் போனவர்களது உறவுகளுக்கு இழப்பீடு வழங்க என முன்னரே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த நிதிக்கு மேலதிகமாகவே இந்த 30 கோடி ரூபா ஒதுக்கபடுகின்றது.
அத்தோடு, மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அதாவது 2015 – 2019 காலப்பகுதியில் அரசியல் பழி வாங்கல்களுக்கு உள்ளாக்க பட்டவர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க 10 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் பசில் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டார்.