கள்ள சாராயம் குடித்தமையினால் 36இற்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
பீகார் மாநிலத்தின் மேற்கு சம்பாரண், கோபால்கஞ்ச், சமஸ்திபூர் மற்றும் முசாபர்பூர் ஆகிய மாவட்டங்களிலேயே இந்த உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகி உள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து பீகார் காவல்துறை தற்போதுவரை 800 க்கும் அதிகமான சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் மாநிலம் முழுவதும் நடாத்தப்பட்ட சோதனையில் 20 ஆயிரம் லிற்றர் கள்ள சாராயங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி மது விலக்கு தொடர்பில் விரிவான ஆய்வுகள் நடத்தப்படும் என மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.