அ.தி.மு.க. பொது குழு கூட்டம் செல்லாது என அறி விக்க கோரி சசிகலா தொடர்ந்த வழக் கில், “அ.தி.மு.கவில் உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படையும் இல்லை” என ஓ.பன்னீர் செல்வம் தரப் பில் வாதிடப்பட்டது.
கடந்த 2017ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நடை பெற்ற அ.தி.மு.க. பொதுக் குழுக் கூட்டத் தில், சசிகலா மற்றும் தினகரனை பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் பதவி களில் இருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தை எதிர்த்தும் பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரியும் சசிகலா தரப்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை நகர நீதிமன்றில் நடந்து வருகி றது.
நேற்று அந்த வழக்கு மீண் டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி வாதாடும் போது கூறிய தாவது:-
சசிகலா கட்சியில் இருந்து நீக்கம் செய்யப் பட்டு, அதனை டில்லி உயர் நீதிமன்றில் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்தநிலை யில், தன்னை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என சசிகலா தவறான தகவல்களை தெரிவித்து வருகிறார்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங் கிணைப்பாளரை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை பயன் படுத்தவும் அனுமதி வழங்கி உள்ளது.
சசிகலா அ.தி.மு. கவிலேயே இல்லை என்கிற போது கட்சியின் உறுப்பினர் கள் விவரம், சொத்து, வைப்பு நிதி, தலைமை அலுவலகத்தின் சாவி ஆகியவற்றை தன்னிடம் ஒப்படைக்கும் படி கோருவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.
அ.தி.மு.க.வில் உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படையும் இல்லை” என சட்டத்தரணி வாதாடினார். வழக்கு விசாரணை இன்றும் நடைபெறும்.