பெண் ஒருவர் பத்து மாதம் சுமந்த குழந்தை அவரது குழந்தை அல்ல என்று தெரியவந்ததைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்கள், ஒரு குடும்பத்தையே கலங்கிப்போகச் செய்ய, அந்த காயங்களிலிருந்து விடுபட முயன்றுகொண்டிருக்கிறது ஒரு அமெரிக்கக் குடும்பம்!
2வது குழந்தை வேண்டும் எனும் ஆசையில், நீண்ட காலமாக குழந்தை உருவாகமையினால், செயற்கை கருவூட்டல் முறையில் டப்னா (43) எனும் பெண் கருவுற்று இருந்தார்.
இந்நிலையில் குழந்தை பிறந்த பின்பு, பார்க்கும் போதே அது அவர்களின் குழந்தை இல்லை என தெரியவந்தது.
குழந்தை வளர வளர, சந்தேகம் வலுவடைந்த நிலையில், DNA பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தார் டப்னாவின் கணவரான அலக்சாண்டர் ஹர்டினலே (41).
பரிசோதனையின் முடிவுகளின் படி அந்த குழந்தை அலக்சாண்டரின் DNAவோ, அல்லது டப்னாவின் DNAவோ இல்லை என தெரியவந்ததை அடுத்து அந்த தம்பதிகள் அதிர்ந்து போயினர்.
இதன் பின் தாம் சிகிச்சை எடுத்த செயற்கை கருவூட்டல் மருத்துவமனையை அணுகிய போதுதான் இவர்களது கருமுட்டை வேறொரு பெண்ணிற்கு தவறுதலாக வைக்கப்பட்டுவிட்டது எனும் உண்மை தெரியவந்தது.
அதற்குள் நான்கு மாதமாகிவிட்ட நிலையில், அந்த தம்பதியர் அழைக்கப்பட்டு உண்மை விளக்கப்பட்டு குழந்தைகள் அதனதன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்கள்.
தன் குழந்தைக்கு வேறொரு பெண் பாலூட்டி வளர்க்க, இப்போது அந்தக் குழந்தையைப் பிரியவேண்டி வர, குழம்பிப்போனார்கள் தம்பதியர்.
இதைவிட ஒரு பெரும் அதிர்ச்சியை அவர்கள் எதிர்கொள்ள வேண்டி இருந்தது.
இந்த தம்பதியருக்கு ஐந்து வயதில் ஒலிவியா எனும் குழந்தை இருக்கிறாள்.
அவளிடம், இவ்வளவு நாள் நம் வீட்டில் இருந்தது உன் தங்கை அல்ல என கூற, அக்குழந்தை அதனை தாங்க இயலாத கோபத்தில் பெற்றோரிடம் பேசுவதையே முற்றிலும் நிறுத்திவிட, கலங்கி போயிருக்கிறார்கள் தம்பதியர்.
பிறகு, இதுவரை தாங்கள் வளர்த்த அந்த குழந்தையின் பெற்றோருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, அவ்வப்போது சேர்ந்து வெளியே செல்வதும், குழந்தைகளின் பிறந்தநாளை சேர்ந்து கொண்டாடுவதுமாக சமாளித்துக்கொண்டிருக்கிறது அந்தக் குடும்பம்.
இந்நிலையில், இப்படி மன அழுத்தத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்திய மருத்துவமனை மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள் அலெக்ஷான்டர்ம் டப்னா தம்பதியர்…