கடந்த சில மாதங்களில் மாத்திரம் சுமார் 1500 பெண்கள் காணாமல் போயிருப்பதாக இலங்கை பொலிஸார் அதிர்ச்சி தகவல் ஒன்றை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
பயணப்பை ஒன்றில் இருந்து பெண் ஒருவரது சடலம் சப்புகஸ்கந்த பிரதேசத்தில் மீட்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பிலான விசாரணைகளில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு காணாமல் போன பெண்களில் திருமணமானம் செய்த பெண்களும் உள்ளடங்குவதாகவும், சில பெண்கள் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளிற்கு சென்று இருப்பார்கள் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அத்தோடு காணாமல்போன பெண்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.