நாடு முழுதும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்களிற்கான கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
தரம் 10,11,12 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களிற்கான கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்க கொவிட்-19 தடுப்பு செயலணி பரிந்துரை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு 6 – 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்பித்தல் செயற்பாடுகளை மீள ஆரம்பித்தல் மற்றும் பரீட்சை நடவடிக்கைகளை முன்னெடுப்பது போன்ற காரணிகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
இதேவேளை, சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களை 50 சதவீத கொள்ளளவில் எதிர்வரும் 16ம் திகதி தொடக்கம் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.