மூன்று அமைச்சர்களை பதவி நீக்க அவசர கலந்துரையாடல்!
அமைச்சரவை தீர்மானத்தை விமர்சித்த அமைச்சர்களின் பதவிகளை நீக்குமாறு ஜனாதிபதி நீக்கவேண்டும் என அரசின் பின்வரிசை உறுப்பினர்கள் கலந்துரையாடலை நடத்தி வருவதாக தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தியில், அமைச்சரவை தீர்மானத்தை விமர்சித்த வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ஸ மற்றும் உதயகம்மன்பில ஆகியோரை நீக்குவது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.
அரசை விமர்சனம் செய்யாமல் அமைச்சு பதவியைத் துறந்தபின், சமூகத்தில் எதையும் கூற வேண்டும் என பின்வரிசை உறுப்பினர்கள் முன்னர் பகிரங்கமாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், மின் நிலைய பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்பனை செய்தல் உட்பட எல்.என்.ஜி. கொடுக்கல் – வாங்கல்களுக்கு எதிராக 11 அரச கட்சிகள் புறக்கோட்டையில் மக்கள் பேரவை கூட்டப்பட்டு அரசை மூன்று அமைச்சர்களும் கடுமையாக விமர்சித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.