கோட்டாவின் தீர்மானம் தமிழருக்கு எதிராக அமையாது – டக்ளஸ் நம்பிக்கை!

தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமரின் இறுதி தீர்மானங்கள் தமிழர்களுக்கு பாதகமாக அமையாது என, டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

“ஒரே நாடு ஒரே சட்டம் எனும் ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இணைக்கப்படவில்லை. இது குறித்து என்னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்ற ஜனாதிபதி, 3 தமிழ் பிரதிநிதிகளை உள்வாங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயலணிகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் எம்மைப் பொறுத்த வரையில் இதனை பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. ஏனென்றால், ஜனாதிபதி மற்றும் பிரதமரால் மேற்கொள்ளப்படும் இறுதி  தீர்மானங்கள் தமிழர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்காது எனும் நம்பிக்கை எனக்கு உள்ளது.

அத்தோடு நுனிப் புல் மேய்கின்றவர்களும் குறுகிய அரசியல் நோக்கங் கொண்டவர்களுகளுமே இவ்விடயங்களை தமது குறுகிய அரசியல் நலன்களுக்காக பூதாகரமாக்க முயற்சி செய்கின்றனர் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

Exit mobile version