வங்கியில் கடன்பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி!

கடன் வசதிகளை பெறுவதற்காய் வரும் மக்களுக்கு இலகு முறையில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிடம் இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.

பொது மக்களுக்கு நிதிகடன் வசதிகளை வழங்குவதில் இலங்கை கடன் தகவல் பணியகத்தின் CRIB பதிவுகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் இலங்கை மத்திய வங்கி, குறித்த நிதி நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்தோடு கடன் வழங்காமல் இருப்பதற்கு CRIB பதிவுகளை காரணமாக எடுக்க  வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றுநோய் காரணமாக நிதி நெருக்கடியில் உள்ள மக்கள் வாங்கிய கடன்களில் சில தவறுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு மத்திய வங்கி இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளது.

ஏற்கனவே அரச மற்றும் தனியார் வங்கிகளிடமும் இந்தக் கோரிக்கையை இலங்கை மத்திய வங்கி விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version