ஒரே நாடு ஒரே சட்டத்தில் தமிழர்களையும் இணைக்க ஜனாதிபதி இணக்கம்!

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் ஜனாதிபதி செயலணியில் தமிழ் பிரதிநிதிகளையும் இணைப்பதற்கு ஆளும் கட்சித் கூட்டத்தில் அரச தலைவர் கோத்தபாய ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரான செந்தில் தொண்டமான் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

ஞானசார தேரர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த செயலணியில் தமிழ் பிரதிநிதிகள் எவரும் உள்ளடக்கப்படாமை தொடர்பில் பெருமளவில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற அங்கத்துவக் கட்சிகளது தலைவர்களுக்கும் அரச தலைவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது, இவ்விடயத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோர் பிரஸ்தாபித்திருந்தனர்.

அதன் பிரகாரம் அச் செயலயணியை மேலும் விஷ்த்தரித்து, தமிழ் பிரதிநிதிகளை உள்ளடக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்ததாக செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Exit mobile version