மாத்தறை மாவட்டம், கொட்டபொல பிரதேசத்தில் வரலாறுகளுடன் தொடர்புடைய “கட்டபருவ” விகாரை அமைந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இவ் விகாரைக்கு நபர் ஒருவர் சென்றுள்ள்ளார்.
குறித்த விகாரையில் 2மணித்தியால சிறப்பு பூஜையிலும் கலந்துகொண்டுள்ளார்.
இவ் விகாரைக்கு சென்றதினால் அவர் பல வியக்கத்தக்க விடயங்களை அறிந்துகொண்டுள்ளார்.
அவற்றை அனைவரும் கட்டாயம் அறிய வேண்டும் என்பதற்காக முகநூலில் குறித்த பதினை பதிவிட்டுள்ளார். இவ் விகாரையின் பிரதான தெய்வம் “ரஜ்ஜுரு பண்டார” ஆகும். இருக்கின்ற பிரதேசத்தை காக்கும் தெய்வமாக சிங்கள மக்களால் வணங்கப்படுகிறார்.
சுருக்கமாக செல்வதெனில் ரஜ்ஜுரு பண்டார தெய்வம் நமது “ஐயனாரை” போன்றவர். கடல் மட்டத்தில் இருந்து 1500மீற்றர் வரை உயரமுள்ள மலையிலையே இவ் விகாரை அமைக்கப்பட்டுள்ளது.
மலையின் நடுப்பகுதியில் இருந்து ஆரம்பமாகும் கோவிலானது மலை உச்சிவரை ஒவ்வொரு சந்நிதானமாக அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தெய்வங்களை வழிபடும் இடமாக கருதப்படுவதால் பாதுகாப்பு தெய்வங்கள் அனைவருக்கும் இங்கு சந்நிதிகளும் பூசைகளும் காணப்படுகிறது.
இலங்கையை காவல்காப்பதாக சிங்கள மக்கள் நம்பும் “விஷ்னு, முருகன், விபீஷ்ணன், பத்தினி, பத்ரகாளி, வைரவர் உட்பட பல தெய்வங்களுக்கு இங்கு பூஜை செய்யப்படுகிறது.
விபீஷ்ணனுக்கான சிலையும் காணப்படுவது குறிப்படவேண்டிய விடையமாகும். இவ் விகாரையில் உள்ள “நாக சந்நிதானத்தில் “ஓம்” மற்றும் “சுவஸ்திகா” பொறிக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
இந்துவும் பௌத்தமும் ஒன்று சேர்ந்து செல்ல முடியும் என்ற எண்ணக்கருவை மேலும் மேலும் வழுவடைய செய்யும் வகையிலையே இறைவன் இவ் விகாரையை கண்ணில் படவைத்ததாக அந்த நபர் கருதுகின்றார்.