உலகம்

மர்மங்களால் நிறைந்து அதிசயங்கள் நடக்கும் சக்தி வாய்ந்த சிவன் கோவில்!

நாம் வாழும் இந்த பூமி மிக சக்தி வாய்ந்த மாயை என்றே கூறலாம். இங்கு நாம் கண்ணால் பார்க்கும் சில விடயங்கள் நம்மை பிரம்மிக்க செய்யும்.

கடவுளின் படைப்பில் மனிதர்கள் கூட சில சமயம் அதிசயவாதிகளாக மாறுகின்றனர்.

அப்படி இருக்க நாம் வணங்கும் கடவுளின் அமைவிடங்கள் எப்படி இருக்கும்… நிச்சயம் அங்கு மர்மமும், அதிசயம் காத்திருக்கும் என்பது மறக்க முடியாத ஒன்று.

இன்று அப்படி ஒரு இடத்தை பற்றிதான் பார்க்க போகின்றோம்… என்னுடன் சேர்ந்து பயணிக்க தாயாராகுங்கள். மர்மம் நிறைந்த கோவிலான ஹரிஷ் சந்திரேஸ்வரர் சிவன் கோவில் பற்றி உங்களில் பலர் கேள்வி பட்டிருக்க வாய்ப்புண்டு.

எனினும் அங்கு நடக்கும் மர்மங்களுக்கு என்ன காரணம் என்பதை என்றாவது ஆராய்ந்தது உண்டா?

 அதிசயம் மிக்க இந்த சிவன் கோவிலில் நிறைய மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமலே இருக்கின்றன. ஹரிஷ் சந்திரேஸ்வரர் சிவன் கோவிலைச் சுற்றிலும் ஏராளமான மர்மங்கள் நிறைந்திருக்கின்றன.

இந்த மர்மங்கள் நிறைந்த குகை கோயில் மகாராஷ்டிர மாநிலத்தில் தான் இருக்கிறது.

ஆறாம் நூற்றாண்டில் கலாசூரி என்னும் மன்னனால் கட்டப்பட்ட அதிசயக் கோவில் தான் இந்த ஹரிஸ் சந்திரேஸ்வரர் கோவில். இந்த கோவில் மட்டுமல்ல.

இதற்கு மிக அருகிலேயே கேதாரேஸ்வரர் என்னும் அதிசயங்களும் மர்மங்களும் நிறைந்த குகை ஒன்று இருக்கிறது. இந்த குகை மற்ற குகைகளைப் போல அல்ல.

தண்ணீர் நிறைய இருக்கும். அந்த நீருக்கு நடுவே ஐந்தடி உயரத்தில் கம்பீரமாக ஒரு சிவலிங்கம் வீற்றிருக்கிறது. இந்த லிங்கத்தைச் சுற்றியிருக்கிற தண்ணீர் ஐஸ் கட்டியைப் போல மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்.

இந்த தண்ணீரின் குளிரைத் தாண்டி சிவலிங்கத்தின் அருகில் சென்று வணங்குவது கொஞ்சம் கடினமான விஷயம் தான். குறிப்பாக மழைக்காலங்களில் எல்லாம் இந்த குகைக் கோவிலுக்குள் செல்வது பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது.

இந்த குகைக்குள் இருக்கிற சிவலிங்கத்தைச் சுற்றி நான்கு தூண்கள் அமைந்திருக்கின்றன. இந்த நான்கு தூண்களும் நான்கு யுகங்களைக் குறிக்கிறதாம்.

சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் என்னும் நான்கின் அடையாளமாகத் தான் அந்த நான்கு தூண்கள் அமைந்திருக்கின்றன.

ஒவ்வொரு யுகம் முடிவடையும் போதும், ஒவ்வொரு தூணாக கீழே விழும் என்பது தான் நியதியாகும். அதன்படி ஏற்கனவே மூன்று தூண்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் விழுந்து விட்டனவாம்.

இன்னும் ஒரே ஒரு தூண் மட்டுமே மிச்சமிருக்கிறது. அந்த நான்காம் தூண் தான் கலியுகத்தைக் குறிக்கும் தூணாம். அந்த நான்காம் தூண் தான் இந்த பிரபஞ்சத்தையே தாங்கிக் கொண்டிருக்கிறதாம்.

இந்த தூண் விழும் நாள் தான் கலியுகத்தின் கடைசி நாளாக இருக்குமாம். அன்று உலகம் புதைந்து அழிந்து விடும் என்று நம்பப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button