நிதி அமைச்சிடம் இருந்து எதிர்பார்க்கும் வரிச்சலுகை கிடைக்காவிட்டால் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க நேரிடுமென எரிசக்தி அமைச்சர் உதயன் கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஒரு லீட்டர் பெற்றோல் 15 ரூபாவினாலும் டீசல் 25 ரூபாவினாலும் அதிகரிக்க IOC நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனமும் எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளன.
இந்நிலையில் இது தொடர்பில் பரீசிலீத்து வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.