மக்கள் சரியான முறையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றவில்லை எனின் மீண்டும் கொவிட் கொத்தணி உருவாகும் அபாயம் இருப்பதாக சிறுவர்கள் விஷேட வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு வேண்டும் என விஷேட வைத்தியர் சன்ன த சில்வா தெரிவித்துள்ளார்.
பயணக் கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி வேலைத்திட்டம் காரணமாக கொவிட் பரவலில் கட்டுப்பாட்டை காணக்கூடியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் டெல்டா வைரஸ் தொற்று பரவலி வருவதினால் எதிர்காலத்தில் மிகவும் அபாயகரமான நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது பெற்றோரின் கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.