இலங்கை

மஹிந்தவின் சகோதரி தமிழரை திருமணம் செய்தது ஏன்? உண்மை அம்பலம்!

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) கடந்த 2017 ஆம் ஆண்டு நிருபமா ராஜபக்ஸ (Nirupama Rajapaksa) மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் (T.Nadesan) தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் இலங்கையின் சமூக வலைத்தளங்களில் தற்போது பிரபலமடைந்து வருகின்றது.

நடேசன் அமைச்சர் பசில் சொத்துக்களுக்கு பாதுகாப்பவராக செயற்படுகின்ற விடயம், அவரது வங்கிக் கணக்கில் காணப்படும் கோடிக்கணக்கான பணம் மற்றும் அரசாங்கத்தின் உயர் பீடத்திற்கும் நடேசனுக்கும் இடையிலான தொடர்பு உள்ளிட்ட பல விடயங்களை அநுர குமார திசாயக்க (Anura Kumara Dissanayake) தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து மேலும் சுட்டிக்காட்டிய அவர்,

நிருபமா ராஜபக்ச திருமணம் செய்து கொண்டது யாரை? தி. நடேசனை என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் பசில் ராஜபக்சவின் பணம் நடேசனிடமே உள்ளது. இதனை வெளிப்படையாகே கூற வேண்டும். நான் ஊடகங்களுக்கு முன்பாகவே இதனை கூறுகின்றேன்.

நடேசனின் வங்கி கணக்கையும் சொத்து மதிப்பை காட்டுங்கள். மல்வானையில் உள்ள அமைச்சர் பசில் பெரிய வீட்டின் உறுதிப்பத்திரம் நடேசனின் பெயரிலேயே உள்ளது. பசிலின் சொத்துக்களை பாதுகாக்க நம்பிக்கைக்குரியவர் தமிழர் ஒருவரே.

ரணில் விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்சவை சந்திக்க ஜனவரி மாதம் 9ஆம் திகதி அதிகாலை 3 மணிக்கு அலரி மாளிகைக்கு சென்றார். அவர் யாருடன் சென்றார் என நான் நாடாளுமன்றில் வைத்து அவரிடம் கேட்டேன், நீங்கள் அன்று அதிகாலை 3 மணிக்கு மஹிந்த ராஜபக்சவை சந்திக்க நடேசனுடன் தானே சென்றீர்கள் எனக் கேட்டேன்.

அதற்கு ரணில் விக்கிரமசிங்க இல்லை நான் 2 கார்களில் சென்றதாக கூறினார். அதிகாரத்தை மாற்றிக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைக்குக் கூட நடேசனுடன்தான் செல்கின்றார்கள். அவர்களிடம் இனவாதம் இல்லை. அவர்கள் ஒன்றாகவே இருக்கின்றார்கள்” என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்தார்.

பணத்தை பதுக்கி வைத்த 65 இலங்கையர்கள், விபரம் இதோ!

திருக்குமார் நடேசன் பாரிய நிதி மோசடி!

திருக்குமார் நடேசன் ஜனாதிபதிக்கு அனுப்பிய அவசர கடிதம்

கைது செய்யப்பட்ட திருக்குமார் நடேசன்! பிணையில் விடுதலை!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button