அநுராதபுரம்இலங்கை

துடி துடிக்க தனது குழந்தையை கொலை செய்த பட்டதாரி தாய்!

அனுராதபுரம் பகுதியில் பிறந்து ஒன்றரை மாதங்களேயான தனது  குழந்தையினை கோடாரியால் வெட்டி கொலை செய்த தாயார் தொடர்பான சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இன்று பகல் அனுராதபுரம் ஷ்ரவஸ்திபுர பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து தெரியவருவதாவது,

பிறது ஒரு மாதமும் 20 நாட்களும் நிரம்பிய குழந்தையினை பட்டதாரி ஆசிரியையான 30 வயதுடைய குறித்த இளம்தாய் வெட்டி கொலை செய்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தன்னுடைய குழந்தையினை கோடாரியால் வெட்டி  கொலை செய்துவிட்டு குறித்த தாய், கல்னேவ பொலிஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்துள்ளதாகவும், அங்கு வைத்து அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட குழந்தையின் சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட தாயிடம் பொலிஸார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button