கார் விபத்துக்குள்ளானதில் டிக்டாக் பிரபலம் உட்பட மூவர் பலி!

அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்த டிக்டாக் பிரபலமான கேப்ரியல் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் கேப்ரியல் சலாஜர்(வயது 19), டிக்டாக்கில் பிரபலமான கேப்ரியலை 2.8 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.

இந் நிலையில் சில நாட்களுக்கு முன்னர் சொகுசுகாரில் சென்றுள்ளார், அதிவேகமாக கார் சென்றதால் தடுத்து நிறுத்த போலீசார் முயற்சித்துள்ளனர்.

காரை நிறுத்தாமல் தொடர்ந்து வேகமாக சென்று மரத்தில் மோதியதில் கார் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதி்ல் கேப்ரியல் உட்பட அவருடன் பயணித்த மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

Exit mobile version