இலங்கையாழ்ப்பாணம்
ஆடையில் தீப்பற்றியதில் 3 பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக உயிரிழப்பு!
யாழில் மதுபோதையில் ஆடையில் பெற்றோல் பட்டதை அறியாது புகைப்பிடித்தவர் தீ பற்றியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சத்தியசீலன் தர்மசீலன் என்னும் 45 வயதுடைய அளவெட்டி மேற்கு, அளவெட்டி என்னும் முகவரியுடைய 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த நபர் அளவெட்டியில் கடந்த 25ஆம் திகதி மதுபானம் அருந்திய பின் மோட்டார் சைக்கிளைத் திருத்திய வேளை, அவர் அணிந்திருந்த சாரத்தில் பெற்றோல் பட்டுள்ளது.
இதை அறியாத குறித்த நபர் இரவு 10 மணியளவில் பீடி பற்றிய போது சாரத்தில் நெருப்பு பட்டு எரிந்துள்ளது.
உடனடியாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
சடலம் மீதான மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.