ஸ்பெயின் நாட்டில் கேனரி தீவில் வெடித்து சிதறிய எரிமலையின் தீக்குழம்பானது கடலில் கலந்ததால் அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஸ்பெயின் நாட்டில் உள்ள வடமேற்கு ஆப்பிரிக்காவில் கேனரி தீவுகள் அமைந்துள்ளன. இத் தீவில் லாபால்மா எரிமலை உள்ளது. இந்த தீவில் சுமார் 85 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 19ம் திகதியன்று அந்த தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கிருந்த லா பால்மா எரிமலை வெடித்து சிதறியது. மேலும் எரிமலை வெடித்து சிதறியதும் அந்த தீவு சில வினாடிகளுக்கு கரும்புகை சூழ்ந்து காட்சியளித்தது.
குறிப்பாக கடந்த 50 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக லா பால்மா எரிமலை வெடித்து சிதறியுள்ளது. இதனை அடுத்து லா பால்மா எரிமலையிலிருந்து வெளிவரும் தீ குழம்பானது அட்லாண்டிக் கடலில் கலந்தால் ஆபத்து நிறைந்த வாயுக்கள் வெளிவரலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து எரிமலை வெடித்து சிதறியதால் அதிலிருந்து வந்த தீ குழம்புகள் கடலில் கலந்துள்ளது.
இதன் காரணமாக கேனரி தீவில் அமைந்துள்ள கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த எரிமலை வெடிப்பின் காரணமாக சுமார் 500 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 6000 பேர் இதுவரையில் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.