கனடாவில் தூக்கத்தில் இருந்த 3 வயது சிறுவனை கொடூரமாக தாக்கி கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி குறித்த நபருக்கு தண்டனை காலத்தின் முதல் 25 ஆண்டுகள் பிணை அளிக்கவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
வின்னிபெக் பகுதியை சேர்ந்த 3 வயது Hunter Smith-Straight என்ற சிறுவனே 34 வயது டேனியல் ஜென்சன் என்பவரால் கடந்த 2019ல் கொடூரமாக கொல்லப்பட்டான்.
இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணைகள் முடிவடைந்த நிலையில், புதன்கிழமை இரவு சுமார் 8.30 மணியளவில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறுவன் Hunter Smith கடந்த 2019 அக்டோபர் 30ம் திகதி அதிகாலையில் தூக்கத்தில் இருக்கும் போதே கொல்லப்பட்டதாக முன்னர் நடந்த விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய சிறுவனை உறவினர் ஒருவரே முதலில் கண்டுள்ளார். உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் காயங்கள் காரணமாக மூன்று நாட்களுக்கு பிறகு சிறுவன் Hunter Smith சிகிச்சை பலனின்றி ந்துள்ளான்.
ஜென்சன் திட்டமிட்டே வன்மத்துடன் சிறுவனை கத்தியால் தாக்கியதாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. சிறுவனின் தாயார் மீதான ஆசை காரணமாகவே ஜென்சன் இந்த தாக்குதலை முன்னெடுத்ததாக கூறப்படுகிறது.
தனியாக தூக்கத்தில் இருந்த சிறுவனை ஜென்சன் ஆறு முறை கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளார். சம்பவத்தின் போது ஜென்சன் அணிந்திருந்த உடையில் படிந்திருந்த ரத்தத்தில் சிறுவனின் டி.என்.ஏ கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தில் குடியிருப்பில் வேறு நபர் எவருக்கேனும் தொடர்பு இருக்கலாம் எனவும், ஏனெனில் சிறுவனை ஜென்சன் கத்தியால் தாக்கியதற்கு சாட்சியங்கள் இல்லை என ஜென்சன் தரப்பில் வாதிடப்பட்டது, ஆனால் நிரூபிக்கப்படவில்லை