உலக பணக்காரர் பட்டியலில் மீளவும் முதலிடத்திற்கு டெஸ்லா நிறுவனத்தின் CEO எலான் மஸ்க் வந்துள்ளார். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 213 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
இதுவரை காலமும் முதலாம் இடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் 2வது பணக்காரர் எனும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில் எலான் மஸ்க், 2வது இடத்தில் இருக்கும் அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ்க்கு நம்பர் 2 என்ற சிலையை அனுப்ப இருப்பதாக கிண்டல் அடித்துள்ளார்.
இது குறித்து எலான் மஸ்க், அனுப்பியதாக கூறப்படும் மின்னஞ்சலில், வெள்ளி பதக்கத்துடன், 2வது நம்பரை குறிப்பிடும் வடிவத்தில் மிகப்பெரிய சிலையை ஜெப் பெஸோஸ்க்கு அனுப்ப இருப்பதாக கேலி செய்துள்ளார் என பிரபல பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
எலான் மஸ்க் – ஜெப் பெஸோஸ் இடையே விண்வெளி திட்டங்கள், தானியங்கி கார் உற்பத்தி போன்ற துறைகளில் கடும் போட்டி நிலவி வருகிறது.
உலக பணக்காரர்கள் வரிசையில் ஜெப் பெஸோஸ் முதலிடத்தில் இருந்து வந்த நிலையில், டெஸ்லா பங்குகளின் விலை உயர்வால் எலான் மஸ்க் 20 ஆயிரம் கோடி டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஜெப் பெஸோஸ் 19 ஆயிரத்து 200 கோடி டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.