உடனடியாக அமுலுக்கு வந்த புதிய நடைமுறைகள்!

நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை வருகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள், விமானத்தில் ஏறும் முன் நடாத்திய பி.சி.ஆர். முடிவிற்கு அமைய, இலங்கையில் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளாது விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொரோனா தடுப்பூசிகள் இரண்டினையும் முழுமையாக பெற்றிருப்பதோடு இலங்கை வர முன்னர் 72 மணிநேரங்களுக்குள் நடாத்தப்படும் பி.சி.ஆர். சோதனைகளில் கொவிட் தொற்று இல்லை எனும் முடிவினை பெற்றிருக்க வேண்டும்.

சுகாதார அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில், தொழில்நுட்பக் குழுவால் இம்முடிவு அறிவிக்கப்பட்ட போது சுகாதார அமைச்சு குறித்த அனுமதி வழங்கியுள்ளது.

அத்தோடு, இரு தடுப்பூசிகளையும் போடாத வெளிநாட்டவர்கள்  தனிமைப்படுகின்ற ஹோட்டலுக்கு, தனிமைப்படுத்தல் உயிர் குமிழி பாதுகாப்பின் அடிப்படையில், செல்ல அனுமதி வழங்கப்படவுள்ளது.

அங்கு வைத்து அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை நடாத்தப்படும் என  சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

தற்போது நாட்டிற்கு வருகின்ற பயணிகள் 72 மணி நேரத்திற்கு முன் கட்டாயம் பி.சி.ஆர். சோதனை மேற்ண்டு இருக்க வேண்டும் என்பதோடு, அவர்களது சோதனை முடிவுகளின் படி, அவர்கள் தொற்றாளர்களாக இல்லை எனின் மாத்திரம் விமானத்தில் பயணம் செய்ய  அனுமதி வழங்கப்படும்.

Exit mobile version