அரிசிக்கான அதிக பட்ச சில்லறை விலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மூன்று வகை அரிசிகளுக்கான விலையினை பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் வௌியிட்டுள்ளது.
அதனடிப்படையில் நாட்டரிசி ஒரு கிலோ 115 ரூபாவாகவும், சம்பா அரிசி ஒரு கிலோ 140 ரூபாவாகவும் மற்றும் கீரி சம்பா ஒரு கிலோ 165 ரூபா ரூபாவாகவும் விலை குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறித்த சங்கத்தின் தலைவர் டட்லி சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டரிசி ஒரு கிலோவை 62.50 ரூபாவிற்கும், சம்பா அரிசி ஒரு கிலோவை 70 ரூபாவிற்கும் மற்றும் கீரி சம்பா ஒரு கிலோவை 80 ரூபாவிற்கும் விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.