‘சிக்னல்’ செயலி செயலிழப்பு! பயனர்கள் பெரும் அவஸ்தை!
சிக்னல் என்னும் மெஸேஜிங் செயலி செயலிழந்துள்ளதால் அதன் பயனாளர்கள் கடும் அவஸ்தைக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய துணை செயலியை அறிமுகப்படுத்தி அந்த செயலிக்கு ‘சிக்னல்’ என்னும் பெயரும் இடப்பட்டிருந்தது. ஆனால் புதிய பாதுகாப்பு கொள்கையானது தோல்வியில் முடிந்தாலும் அந்த செயலியானது அனைவரிடமும் பிரபலமானது. இந்த செயலியானது அறிமுகமான சில நாட்களிலே வெகுவான வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்திழுத்தது.
இந்த நிலையில் நேற்று முதல் சிக்னல் செயலி திடீரென செயலிழந்துள்ளது. இது குறித்து அந்த செயலியின் தொழில்நுட்ப அதிகாரிகள் தெரிவித்ததாவது,”சேவையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்போது ‘சிக்னல்’ பாதிக்கப்பட்டுள்ளது. இதை சரிசெய்ய எங்கள் குழு செயல்படுகிறது.சிக்னல் செயலி 2014 இல் சிக்னல் அறக்கட்டளையால் குறிப்பாக பாதுகாப்பான தனியுரிமைக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது மற்றும் லாபத்திற்காக உருவாக்கப்படவில்லை. குறிப்பிடத்தக்க வகையில், இந்த ஆண்டு ஜூலை மாதம் ‘சிக்னல்’ செயலி செயலிழந்தது.