தொலைபேசி மூலம் நீண்ட நேரமாக மனைவி சிரித்து கதைத்து கொண்டு இருப்பதை அவதானித்த கணவன் மனைவியிடம் சென்று யாரோடு கதைக்கிறாய் என கேட்தற்கு கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சேலம் மசையன் தெரு காட்டூர் பகுதியில் வசித்து வருகிறார் பாலமுருகன்.(32 வயது). இவரது மனைவி இலக்கியா (26 வயது).
கல்லூரியில் படித்து வந்த இலக்கியாவிற்கும் பஸ் கண்டக்டராக வேலை பார்த்த பாலமுருகனுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியது .
காதலுக்கு பெற்றோர் சம்மதிக்காத நிலையில், பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த 2020-ல் திருமணம் செய்தனர்.
இப்போது இவர்களுக்கு 7 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. திருமணம் ஆனதில் இருந்தே தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் இலக்கியா சில மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து குழந்தையோடு தனது அம்மா வீட்டுக்கும் சென்றுவிட்டார்.
அத்தோடு கணவர் தன்னை அடித்து கொடுமை செய்வதாக போலீசில் முறைப்பாடும் செய்தார்.
இந்த முறைப்பாட்டின்படி போலீசார் பாலமுருகனை கைது செய்தனர். சில வாரத்திற்கு முன் ஜாமீனில் பாலமுருகன் வெளியில் வந்தார்.
இந்நிலையில் இரு நாட்களுக்கு முன்னர் “நாம் மறுபடியும் ஒன்றாக வாழலாம், வழக்கையும் வாபஸ் வாங்கி கொள்ளலாம் என சொல்லி” குழந்தையுடன் மன்னைவி இலக்கியா வந்துள்ளார். பாலமுருகனும் மனைவி சொன்னதை ஏற்றுள்ளார்.
நேற்று முன்தினம் நடுராத்திரியில் இலக்கியா செல்போனில் ரொம்ப நேரமாக யாரிடமோ சிரித்து கதைத்து கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில் யாரிடம் பேசுகிறாய் என மனைவியை கணவன் கண்டித்துள்ளார். இதனால் மீளவும் 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி இலக்கியா, கத்தியை எடுத்து வந்து பாலமுருகனின் மார்பில் குத்திவிட்டார்.
இதில் வலி பொறுக்க முடியாமல் பாலமுருகன் அலறினார். அந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, காயமடைந்த பாலமுருகனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தற்போது பாலமுருகனில் நிலைமை கவலைக்கிடமான உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போலீசார் இலக்கியாவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.