நாட்டில் அரிசிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
சந்தையில் இப்பொழுது ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாடு மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக அரசி வியாபாரிகள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அரிசி மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையினை மாற்றாது விட்டால் இந்த நிலைமை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் கட்டுப்பாட்டு விலைக்கு மேல் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கும் விதிக்கப்படும் அபராதத்தை 100,000 ரூபாயாக அதிகரித்தால், அரிசி விற்பனையிலிருந்து விலகுவதாக மற்றொரு வர்த்தகர்கள் குழு தெரிவித்துள்ளது.
சந்தையில் அதிக விலைக்கு அரிசி விற்கப்படுவதால் நுகர்வோர் விவகார ஆணையம் அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து 2 ஆம் திகதி சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய ஒரு கிலோ நாட்டு அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 98 ரூபாய், ஒரு கிலோ சம்பா அரிசி 103 ரூபாய் மற்றும் ஒரு கிலோ கீரி சம்பா 125 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.