கனடா வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

இந்தியாவில் இருந்து கனடாவிற்கு வரக்கூடிய பயணிகள் விமானங்கள் மீதான தடையினை கனடா நீக்கியுள்ள நிலையில் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 21-ம் தேதி கனெடிய அரசு இந்தியாவில் இருந்து வரும் அனைத்து நேரடி வணிக மற்றும் தனியார் பயணிகள் விமானங்கள் மீதான தடையினை செப்டம்பர் 26-ம் தேதி வரை நீடித்தது.

தற்போது தடை முடிவுக்கு வந்துள்ள நிலையில் கொரோனாவுக்கு எதிரான முழுமையான தடுப்பூசி செலுத்தியது உட்பட சில கட்டுப்பாடுகளுடன் அனைத்து இந்திய பயணிகளும் கனடாவுக்கு பயணிக்கலாம் என  அறிவிப்பு வெளியாகியது

செப்டம்பர் 27-ஆம் தேதி முதல் இந்தியாவில் இருந்து வரக்கூடிய விமானங்கள் கனடாவில் தரை இறங்க அனுமதி வழங்கப்படும் என கனடா அரசின் போக்குவரத்துறை அறிவித்தது.

இதனை அடுத்து இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கான பல்வேறு கட்டுப்பாடுகள் அடங்கிய புதிய விதிகளை கனடா போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டது.

இந்தியாவில் இருந்து நேரடியாக விமானத்தில் செல்ல இருக்கும் பயணிகள் அது புறப்படுவதற்கு 18 மணி நேரத்திற்குள் டெல்லி விமான நிலையத்தில் அங்கீகரிக்கப்பட்ட Genestrings ஆய்வகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை என COVID molecular சோதனை மேற்கொண்டு ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

அனைத்து பயணிகளும் தங்கள் தடுப்பூசி தகவலை செல்போன் செயலி அல்லது இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். விமானத்தில் ஏறுவதற்கு முன்பு அதற்குரிய நிறுவனங்கள் பயணிகளின் கொரோனா சோதனை முடிவுகளை சரிபார்த்து அவர்கள் கனடாவுக்கு வர தகுதி இருப்பவர்களா என உறுதிசெய்து கொள்வார்கள். இந்த தகவலை கனடா போக்குவரத்து துறை அறிக்கையாக வெளியுட்டுள்ளது.

Exit mobile version