இலங்கை
மாகாணங்களிற்கு போக்குவரத்து ஆரம்பமாகும் திகதி வெளியாகியது!
தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை எதிர்வரும் 1ம் திகதி கடுமையான கட்டுப்பாட்டோடு தளர்த்த அரசு தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதன்பின் நாடு எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்த புதிய சுகாதார வழிகாட்டல் தயாரிக்கபடுவதாக கூறப்படுகிறது.
அத்தோடு, இது தொடர்பில் பல தரப்புகளுடனும் சுகாதார அமைச்சு ஆலோசனைகளை பெற்றுவருவதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் முதலாம் திகதி தளர்த்தப்பட்டாலும், மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்துக்கள் ஒக்டோபர் 15 ஆம் திகதி அளவிலேயே ஆரம்பிக்க திட்டம் இடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் வைபவங்களை நிகழ்த்துதல் உட்பட இதர விடையங்கள் தொடர்பில் 15 ஆம் திகதியளவிலேயே தீர்மானம் எட்டப்படவுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.