தடுப்பூசி பெறுவதற்காக வழக்குத் தொடுத்த 12 வயதுச் சிறுவன்!

நெதர்லாந்தின் 12 வயது சிறுவன் ஒருவன் கொவிட்-19 தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பெறுவதற்கு நீதிமன்றத்தில் முன்னெடுத்த சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுவனின் தந்தை எதிர்ப்பை வெளியிட்ட போதும் உயிரிழக்கும் தறுவாயில் உள்ள தனது பாட்டியை காணச் செல்வதற்காகவே சிறுவன் தடுப்பூசி பெற அனுமதி கேட்டு வழக்குத் தொடுத்துள்ளான்.

புற்றுநோயின் உச்சத்தை எட்டி இருக்கும் அவனது பாட்டிக்கு அவன் மூலம் எந்தவொரு வைரஸ் தொற்றும் பரவுவதை தடுப்பூசி தடுக்கும் என நீதிபதியின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதேவேளை நெதர்லாந்தில் 12 தொடக்கம் 17 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்ட போதும் 17 வயதுக்கு குறைந்தவர்களுக்கு தடுப்பூசி பெற பெற்றோர்களின் அனுமதி தேவையாக உள்ளது.

எனினும் தடுப்பூசி பற்றிய சந்தேகங்கள் நெதர்லாந்தில் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் குறித்த சிறுவனுக்கு உடன் தடுப்பூசி போட வேண்டும் என்றும் தந்தையின் கவலையை விட அவனது ஆர்வம் முக்கியமானது என்றும் கிரோனிங்கன் மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி பார்ட் ட்ரொம்ப் குறிப்பிட்டார்.

மேலும் அச் சிறுவன் அதிக நேரம் தனது பாட்டியுடன் செலவிட விரும்புவதாக கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version