பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர், சில நிபந்தனைகளின் கீழ் பொதுப் போக்குவரத்தை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என்று போக்குவரத்துச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதன்படி, பயணிகளை எவ்வாறு பாதுகாப்பாகவும், சுகாதார நடைமுறைகளோடு அழைத்து செல்வது என்பது குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பயணிகள் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய அழைத்து செல்லப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் மாகாணங்களுக்கு இடையேயான சேவையில் தனியார் பேருந்துகளும் ஈடுபட முடியும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அத்துடன், 200,000 ரூபாவிற்கு அதிகமான மானியம் வழங்க தனியார் பேருந்து சங்கங்களுடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.