கூட்டணி கட்சிகள் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த தீர்மானம்!
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தீர்மானம், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி நாடு திரும்பியதும் கூட்டணி கட்சிகள் இந்த சந்திப்பினை நடத்த உள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கெரவலபிட்டிய எல்.என்.ஜீ அல்லது இயற்கை திரவ எரிவாயு மின் உற்பத்தி திட்டம் தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த எரிவாயு திட்டத்திற்கு அமெரிக்க நிறுவனமொன்று முதலீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாடு குறித்து ஜனாதிபதிக்கு இதன் போது அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடனும், கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பூமியின் ஆரோக்கியத்தைப் பேண முன்னுரிமை அளிக்க வேண்டும் – ஜனாதிபதி கோட்டா