பால் மா, கோதுமை மா மற்றும் எரிவாயு விலை அதிகரிப்பு குறித்து இன்றைய தினம் தீர்மானிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவிற்கான விலையை உயர்த்த இறக்குமதியாளர்கள் அனுமதி கோரியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து ஆராயும் நோக்கில் இன்று வாழ்க்கைச் செலவு குழுவானது கூட உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் லசந்த அழகியவன்ன (Lasantha Alagiyawanna) தெரிவித்துள்ளார்.
அத்துடன், கோதுமை மா மற்றும் எரிவாயு விலைகள் குறித்தும் இன்று கவனம் செலுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிகமாக விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கும் நடைமுறை எதிர்வரும் 27ஆம் திகதி அமுல்படுத்தப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.