இலங்கை
சுதேச மருந்து பொதிகளை விநியோகிக்க நடவடிக்கை!!
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் நோக்குடன் அனைத்து வீடுகளுக்கும் சுதேசிய மருந்து பொதி ஒன்றை விநியோகிக்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரத்தில் இருந்து ஆரம்பிக்க இருப்பதாக சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார்.
இந்த சுதேச மருந்து பொதியில், கொவிட் வைரஸ் சிகிச்சைக்காக ஆயுர்வேத வைத்தியசாலைகளில் தற்போது பயன்படுத்தப்படும் பூசணி பொடி, ஆரோக்கியமான நோய்த்தடுப்பு பானம் மற்றும் நோய்த்தடுப்பு பொடி என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும் கொவிட் தொற்று பரவல் அதிகமாக உள்ள பிரதேசங்களை இலக்காகக் கொண்டு, இந்த சுதேச மருந்து பொதிகளை முதலில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.