ஒக்டோபர் 15ம் திகதி தொடக்கம் 200 இற்கும் குறைவான மாணவர்களை கொண்ட ஆரம்ப பிரிவு பாடசாலைகளை மீள திறக்க வாய்ப்புள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில்
சுகாதார அமைச்சினால் முன்னரே பாடசாலைகளை மீள திறப்பதற்கான சுகாதார நடைமுறை தொடர்பான ஆவணத்தை சுகாதார அமைச்சு சமர்ப்பித்துள்ளது.
பாடசாலையில் கற்றல் கற்பித்த செய்ற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முன்னர் பாடசாலை சூழல் துப்புரவு செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தூய்மைப் பணி முடிந்ததும் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான அமைப்பை அமைச்சு உருவாக்கியுள்ளது என்றார். அனைத்து பாடசாலைகளையும் சுத்தம் செய்ய குறைந்தது இரு வாரங்களேனும் ஆகும்.
ஆரம்ப பிரிவு பாடாசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு பொருத்தமான பரிந்துரைகள் சுகாதார அமைச்சினால் செவ்வாய்க்கிழமை (21) கல்வி அமைச்சின் செயலாளரிடம் வழங்கப்பட்டது.
எனினும், பல்வேறு நிலைகளில் பாடசாலைகளை மீள திறக்க சுகாதார அமைச்சு முடிவு எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.